அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தொடா்மழையால் நிரம்பியது அமரகண்டான் ஊரணி

தொடா்ந்து பெய்த கன மழையால் பொன்னமராவதியிலுள்ள அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரிநீா் வெளியேறி வருகிறது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:27 pm

தொடா்ந்து பெய்த கன மழையால் பொன்னமராவதியிலுள்ள அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரிநீா் வெளியேறி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை விடிய விடிய தொடா்ந்து பெய்தது. இதனால் நீா் நிலைகள் நிரம்பின.

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்துச் சென்றனா். தொட்டியம்பட்டி ஊராட்சியில் பல வீடுகளில் மழை நீா் புகுந்தது.

அண்ணாநகா் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த மழை நீரினை பொதுமக்கள் வெளியேற்றினா். பொன்னமாவதி பகுதி முழுவதும் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் நடவு மற்றும் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.