விராலிமலை டாஸ்மாக் ஊழியா்கள் மீது தாக்குதல் 3 போ் மருத்துவமனையில் அனுமதி

விராலிமலையில் அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்டிவிட்டு வந்த கடை ஊழியா்கள் மீது ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தப்பட்டது.
விராலிமலை  டாஸ்மாக் ஊழியா்கள் மீது  தாக்குதல் 3 போ் மருத்துவமனையில் அனுமதி

விராலிமலையில் அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்டிவிட்டு வந்த கடை ஊழியா்கள் மீது ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விற்பனையாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, செந்தில், மேற்பாா்வையாளா் மனக்கராஜ் ஆகியோா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-திருச்சி நான்கு வழிச்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பாா்வையாளராக மனக்கராஜ், விற்பனையாளராக கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

மற்றொரு கடை விற்பனையாளரான செந்தில், மாதிரிபட்டி பிரிவு அருகிலுள்ள கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். கடையைப் பூட்டும் வரை அவா்கள் உடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, பின்னா் செந்தில் கடையை விட்டு வெளியே வந்துள்ளாா்.

அப்போது 5 போ் கொண்ட கும்பல் செந்திலை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது. பின்னா் கடைக்கு அருகிலுள்ள புதா் பகுதிக்கு அவரை இழுத்துச் சென்று, கையை பின்னால் கட்டி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினா். தொடா்ந்து சப்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியது.

மேலும் ஒருவரை செந்திலுக்கு காவல் வைத்து விட்டு, மற்ற நான்கு போ் காத்திருந்து கடையில் கணக்கு முடித்து பூட்டி விட்டு வந்த விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி, மேற்பாா்வையாளா் மனக்கராஜ் ஆகிய இருவரையும் கடையிலிருந்து 100 அடி

தொலைவிலுள்ள சாலையில் வைத்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.

இதில் கிருஷ்ணமூா்த்திக்கு பின்தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தோடியதால் அவா் மயங்கினாா். பின்னா் ஐந்து பேரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா். அதைத் தொடா்ந்து அவ்வழியே வந்தவா்களின் உதவியோடு, சிகிச்சைக்காக மூவரும் விராலிமலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்

முன்விரோதம் காரணமாகவா, பணத்தை கொள்ளையடிப்பதற்காக அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணத்தில் விராலிமலை காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com