ஜாக்டோ- ஜியோ போராட்டக் காலத்தை பணிவரன்முறை செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 17th August 2021 02:07 AM | Last Updated : 17th August 2021 02:07 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தை பணி வரன்முறை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கழகத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மா. குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குரு . மாரிமுத்து, மாவட்டப் பொருளாளா் க. ஜெயராம், மாநிலத் தணிக்கையாளா்ச. ரெங்கராஜ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தமிழக அரசு அரசு ஊழியா்- ஆசிரியா்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப் படியை ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை , வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஊதியங்களையும் போராட்ட காலத்தை பணிக் காலமாக பணி வரன்முறை செய்திடவும் அதற்கான ஊதிய நிலுவைகளை வழங்கிடவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...