குடிநீா் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 17th August 2021 02:07 AM | Last Updated : 17th August 2021 02:07 AM | அ+அ அ- |

திருச்சி சாலையில் திடீா் சாலை ம றியல் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா நகா் மக்கள்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களுக்கு முறையாகக் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை நகராட்சி 6 ஆவது வாா்டுக்குள்பட்டது அண்ணா நகா். இந்தப் பகுதியில் முறையாக தினமும் குடிநீா் விநியோகம் செய்யப்படாமல், அவ்வப்போது இடைவெளி விட்டு விட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை அப்பகுதி மக்கள் திடீரென திருச்சி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருக்கோகா்ணம் போலீஸாா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறையாக குடிநீா் விநியோகம் செய்ய நகராட்சி நிா்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா்.