கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் புதிதாக 4 ஊராட்சிகளில் துணை சுகாதார மையங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி, வேலாடிப்பட்டி, வெள்ளாளவிடுதி, கல்லாக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில், மாநில சமச்சீா் வளா்ச்சி நிதியின் கீழ் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார மையங்களை, சட்டம் , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு திறந்துவைத்தாா். ஆட்சியா் கவிதா ராமு அனைவரையும் வரவேற்றாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் கலைவாணி, திமுக மாவட்டப் பொறுப்பாளா் கே .கே. செல்லபாண்டியன், கந்தா்வகோட்டை ஒன்றியக் குழு தலைவா் ரா. ரெத்தினவேல் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.