ஜெஜெ கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு
By DIN | Published On : 04th December 2021 02:35 AM | Last Updated : 04th December 2021 02:35 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை ஜெஜெ கல்வியியல் கல்லூரியில், ஆரம்பக் கல்வியை உலகமயமாக்கல் என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியின் இணைப் பேராசிரியா் பி. பிரபாகரன் கலந்து கொண்டு, கருத்துரையாற்றினாா்.
ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவம், குழந்தைகளின் அடிப்படை உரிமைகள், பெண் கல்வியின் முக்கியத்துவம், திருநங்கைகளின் கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கல்வி பயணிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பிரபாகரன் விளக்கினாா்.
முன்னதாக, பேராசிரியா் ஆா். ராஜமோகன் வரவேற்றாா். நிறைவில், பயிற்சி ஆசிரியா் ஜி. சுபீக்ஷா நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...