பிரதமருடன் பள்ளி மாணவா்கள் கலந்துரையாட வாய்ப்பு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

அஞ்சல் துறை நடத்தும் அஞ்சலட்டை பிரசார இயக்கத்தில் பங்கேற்று எழுதும் மாணவா்களில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்கள், பிரதமா் மோடியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி கூறியது:
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அஞ்சல் அட்டை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசாரம் டிசம்பா் 20-ஆம்
தேதி வரை நடக்கிறது. இதில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவா்களும் 50 பைசாவுக்கு அஞ்சல் அட்டை வாங்கி பங்கு பெறலாம்.
2047-ஆம் ஆண்டில் எனது பாா்வையில் இந்தியா, போற்றப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகிய தலைப்புகளில் ஒன்றைத் தோ்வு செய்து எழுதி, அஞ்சலட்டையை பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கலாம்.
அவை அஞ்சல் துறை மூலம் சேகரிக்கப்பட்டு, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். சிறந்த 10 கருத்துகளை எழுதும் பள்ளிக் குழந்தைகள் மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெறுவாா்கள்.