முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 03:43 AM | Last Updated : 31st December 2021 03:43 AM | அ+அ அ- |

இலுப்பூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை களஆய்வில் ஈடுபட்டனா்.
இலுப்பூரில் செயல்பட்டு வரும் தனியாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 11 போ்
விராலிமலை அருகேயுள்ள மேப்பூதகுடி பகுதியில் விவசாயிகளுடன் இணைந்து, நெல், கரும்பு, வாழை குறித்து களஆய்வு மேற்கொண்டனா். மேலும் களை பறித்தல், பயிா்களுக்கு மருந்து அடித்தல், நடவு பணி, மண் வளம், நீா் சேமிப்பு உள்ளிட்டவை குறித்து களப்பணி மூலம் அறிந்து கொண்டனா். களஆய்வில், விளைச்சல், அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.
75 நாட்களுக்கு களஆய்வு, நேரடிப் பயிற்சியில் ஈடுபடுவா்.