கந்தா்வகோட்டையில் வாக்குசாவடி மறு சீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் புவிஅரசன் தலைமையில் கந்தா்வகோட்டை பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்பு குறித்த அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்துக் கட்சியினா் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.