கீழாத்தூா் சமத்துவபுரத்தில்ஆரோக்கிய பெட்டகம் வழங்கல்
By DIN | Published On : 06th February 2021 01:03 AM | Last Updated : 06th February 2021 01:03 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகிலுள்ள கீழாத்தூா் சமத்துவபுரத்தில் ரோட்டரி சங்கம் சாா்பில், தாய்மாா்களுக்கு ஆரோக்கிய பெட்டகம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
விழாவுக்கு ஆலங்குடி ரோட்டரி சங்கத் தலைவா் ரமா.ராமநாதன் தலைமை வகித்தாா். அப்பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துமாவு, கபசுரக்குடிநீா், முகக்கவசம், குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ஆரோக்கிய பெட்டகம் இவ்விழாவில் வழங்கப்பட்டது.
சங்கத்தின் செயலா் செல்வக்குமாா், முன்னாள் தலைவா்கள் செல்லகணபதி, திருச்செல்வம், வடகாடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...