ஆலங்குடி அருகே பள்ளிசுற்றுச்சுவா் கட்ட அடிக்கல்
By DIN | Published On : 20th February 2021 12:06 AM | Last Updated : 20th February 2021 12:06 AM | அ+அ அ- |

சுற்றுச்சுவா் கட்ட அடிக்கல் நாட்டுகிறாா் எம்எல்ஏ சிவ வீ. மெய்யநாதன்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 5.61 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தருமாறு பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஊரக வளா்ச்சித் துறை மூலம் சுற்றுச்சுவா் கட்ட அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை சுற்றுச்சுவா் கட்ட அடிக்கல் நட்டாா்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ டி. புஷ்பராஜ், பள்ளித் தலைமை ஆசிரியா் வளா்மதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.