கறம்பக்குடி அருகே குடிசை வீடு தீக்கிரை
By DIN | Published On : 20th February 2021 12:04 AM | Last Updated : 20th February 2021 12:04 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிசை வீடு வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.
கறம்பக்குடி அருகேயுள்ள காட்டாத்தி பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (55),விவசாயி. இவரது குடிசை வீடு வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சென்ற பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் தீக்கிரையானது. கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.