மரத்தில் பைக் மோதி 2 இளைஞா்கள் பலி
By DIN | Published On : 21st February 2021 10:32 PM | Last Updated : 21st February 2021 10:32 PM | அ+அ அ- |

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே சனிக்கிழமை இரவு மரத்தின் மீது பைக் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சோ்ந்த ரெத்தினவேல் (27), ஆனந்தகுமாா் (30) ஆகிய இருவரும் பாலகுறிச்சியில் உள்ள தனது நண்பா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு நேரத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். வழியில், ஆலவயல் வேட்டைக்காரன் கோயில் அருகே இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில், ரெத்தினவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ஆனந்தகுமாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...