புதுகையில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 30th January 2021 11:28 PM | Last Updated : 30th January 2021 11:28 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்க வலியுறுத்தி, புதுக்கோட்டை புறநகா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொமுக கிளைச் செயலா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். தொமுச பொதுச்செயலா் மு. வேலுசாமி, சிஐடியு பொதுச்செயலா் பாலசுப்பிரமணியன் உள்பட அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகளும் பங்கேற்றனா்.