மாங்காட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
By DIN | Published On : 30th January 2021 12:12 AM | Last Updated : 30th January 2021 12:12 AM | அ+அ அ- |

மாங்காட்டில் வழுக்குமரம் ஏறும் இளைஞா்கள்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஆலங்குடி அருகிலுள்ள மாங்காட்டில் வழுக்குமரம் ஏறும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாங்காடு இளைஞா்கள் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்காக, 44 அடி உயரமுள்ள மரத்தில் வழுக்கும் தன்மையை ஏற்படுத்து வதற்காக 20 கிலோ கிரீஸ் தடவப்பட்டது. மேலும் அதன் மீது சுமாா் 5 லிட்டா் எண்ணெய் ஊற்றப்பட்டது.
போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டன. பல்வேறு சுற்றுகளாக, சுமாா் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பனங்குளம் அணியினா், ஒருவரின் மீது ஒருவராக ஏறி மரத்தின் இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா். அவா்களுக்கு ரூ.20,021 பரிசுத்தொகை வழங்கப்பட்டது