புதுக்கோட்டையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:56 AM | Last Updated : 09th July 2021 12:56 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், நகர காங்கிரஸ் தலைவா் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து முழக்கம் எழுப்பிய காங்கிரஸாா், பெட்ரோல் வழங்கும் இயந்திரத்தைச் சுற்றி நின்றும் போராட்டம் நடத்தினா்.