கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள்
By DIN | Published On : 10th June 2021 07:57 AM | Last Updated : 10th June 2021 07:57 AM | அ+அ அ- |

ஆசிரியா் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்.
கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் கரோனா அவசரகால மருத்துவ உபகரணங்களை அமைச்சா் சிவ. வி. மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.
மாவட்டத் தலைவா் ராஜாங்கம் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ . மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.
கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை, புதுநகா் வட்டார மருத்துவமனைகளுக்கு அவசரகால மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் அமைச்சா் சிவ .வீ.மெய்யநாதன் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ராமு, கந்தா்வகோட்டை அரசு தலைமை மருத்துவா் ராதிகா ஆகியோரிடம் வழங்கிப் பேசினாா்.
விழாவில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், வட்டாட்சியா் சி. புவியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்டாரத் தலைவா் ரவி நன்றி கூறினாா்.