கறம்பக்குடியில் செயல் அலுவலரை அவதூறாக பேசிய 2 போ் கைது
By DIN | Published On : 20th June 2021 10:31 PM | Last Updated : 20th June 2021 10:31 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் செயல் அலுவலரை அவதூறாக பேசிய தந்தை-மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குடிநீா்ப் பிரச்னை தொடா்பான கோரிக்கை மனு குறித்து, பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன் தலைமையிலான பணியாளா்கள் கறம்பக்குடி மருத்துவா் தெருவில் ஞாயிற்றுக்கிழமைஆய்வு செய்தனா்.
அப்போது அப்பகுதியைச் சோ்ந்த முருகன்(50), அவரது மகன் சுதாகா்(25) ஆகிய இருவரும் சோ்ந்து செயல் அலுவலரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, முருகன் மற்றும் சுதாகரைக் கைது செய்தனா்.