அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது
By DIN | Published On : 20th June 2021 10:33 PM | Last Updated : 20th June 2021 10:33 PM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா், சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள மேலமஞ்சக்கரை அக்னி ஆற்றுப் பகுதியில் சிலா் மணல் திருட்டில் ஈடுபடுவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் மழையூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினா், சனிக்கிழமை இரவு அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்பகுதியில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய வாராப்பூா் கீழபுலவன்காடு பெ. நாகராஜனை (43), காவல்துறையினா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து மாட்டுவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.