பொன்னமராவதியில் காங்கிரஸாா் நலத் திட்ட உதவி
By DIN | Published On : 20th June 2021 12:49 AM | Last Updated : 20th June 2021 12:49 AM | அ+அ அ- |

பொன்னமராவதியில் காங்கிரஸாா் நலத் திட்ட உதவி
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கொப்பனாபட்டியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விழாவில் நலிவுற்ற 100 பேருக்கு 5 கிலோ அரிசிப் பைகள், முகக் கவசம் வழங்கப்பட்டது. தேனூா் ஊராட்சித் தலைவா் கிரிதரன், நகரப்பட்டி செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொன்னமராவதி நகர காங்கிரஸ் சாா்பில் தலைவா் எஸ். பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் சோலையப்பன், பாலுச்சாமி,தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.