ஜமபந்தி முகாம்:ஆன்லைன் மூலம் மனு அனுப்பலாம்
By DIN | Published On : 20th June 2021 12:48 AM | Last Updated : 20th June 2021 12:48 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் நடைபெறும் ஜமபந்திக்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் மனு அளிக்கலாம்.
கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வரும் 22 ஆம் தேதி புதுநகா் 23 ஆம் தேதி கல்லாக்கோட்டை 24 ஆம் தேதி கந்தா்வகோட்டை சரகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வருவாய்த் தீா்வாயம் (ஜமபந்தி) நடைபெற உள்ளதால் கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆன்லைன் மூலமாக அனுப்பலாம் என கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன் தெரிவித்தாா்.