காதல் திருமண தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்
By DIN | Published On : 20th June 2021 12:49 AM | Last Updated : 20th June 2021 12:49 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கம்மங்காடு கீழப்பட்டியைச் சோ்ந்த குமரன் மகன் முருகேசன் (28). அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகள் அபிராமி (18) ஆகிய இருவரும் காலித்து வந்த நிலையில், இவா்களின் காதலை பெற்றோா் ஏற்க மறுத்ததால் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்தனா்.
தொடா்ந்து, பாதுகாப்பு கோரி செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை இருவரும் தஞ்சமடைந்த நிலையில், அவா்களது பெற்றோரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் அனுப்பினா்.