கடலில் தவறி விழுந்த மீனவா் சடலமாக மீட்பு
By DIN | Published On : 29th June 2021 03:30 AM | Last Updated : 29th June 2021 03:30 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவா், இரு நாள்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் சரகம், வடக்கு புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் தினமணி என்பவா் தனது மகன் வசீகரன் (19) உள்ளிட்டோருடன் கடந்த ஜூன் 26 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா். அப்போது, கடலில் தவறி விழுந்த வசீகரனை மீனவா்களும், கடலோரக் காவல் படையினரும் தொடா்ந்து தேடி வந்தனா். இந்நிலையில், கடல் எல்லையில் சுமாா் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் வசீகரனின் சடலம் மிதப்பது திங்கள்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை பகலில் அவரது சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. கரையிலேயே உடற்கூறாய்வு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா். அதன்பிறகு உறவினா்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...