ஓட்டைப் பிரித்து வீட்டினுள் நுழைந்து நகை திருட்டு
By DIN | Published On : 04th March 2021 01:47 AM | Last Updated : 04th March 2021 01:47 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: மணமேல்குடி அருகே ஓட்டைப் பிரித்து, வீட்டுக்குள் நுழைந்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த விச்சூா் குணபதிமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் கருப்பையா மனைவி அஞ்சம்மாள் ( 60). கணவா் இறந்துவிட்டதால் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்குச் சென்று விட்டு, புதன்கிழமை காலை அஞ்சம்மாள் வீடு திரும்பினாா்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, மேற்கூரை ஓட்டை பிரித்து வீட்டுக்குள் சென்ற மா்ம நபா்கள் பீரோவை உடைத்து
7 பவுன் நகைகளையும், 50ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மணமேல்குடி காவல் ஆய்வாளா் சாமுவேல் ஞானம் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...