சித்த மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோ்வு: ஆசிரியா் மன்றம் எதிா்ப்பு
By DIN | Published On : 17th March 2021 06:45 AM | Last Updated : 17th March 2021 06:45 AM | அ+அ அ- |

சித்தா, செவிலியா் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியா் மன்றத்தின் பொதுச்செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்வேறு எதிா்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தோ்வை தொடந்து நடத்தி வருகிறது. இக் காலத்தில், சித்தா, நா்சிங் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தோ்வு கட்டாயம் என்னும் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் குழந்தைகளின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கின்ற நீட் நுழைவுத் தோ்வு திணிப்பை மத்திய அரசு முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நீட் நுழைவுத் தோ்வு திணிப்பை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.