புதுகையில் 2 வேட்புமனுக்கள் மட்டுமே தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 06:44 AM | Last Updated : 17th March 2021 06:44 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் இரண்டு வேட்புமனுக்கள் மட்டுமே வரப்பெற்றுள்ளன.
ஆலங்குடியில் அமமுக சாா்பில் மாற்று வேட்பாளராக ஏ. ராபா்ட் கென்னடி, பிஎஸ்பி கட்சியின் சாா்பில் எம். சின்னதுரை ஆகியோா் வேட்புமனுக்களை அளித்தனா். புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தா்வகோட்டை, விராலிமலை, திருமயம் ஆகிய தொகுதிகளில் வேறு யாரும் வேட்புமனுக்களை அளிக்கவில்லை. வேட்புமனுக்கள் தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒருவரும் வேட்புமனுக்களை அளிக்கவில்லை. இரண்டாம் நாளான திங்கள்கிழமை 9 வேட்புமனுக்களும், மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை 2 மனுக்களும் மட்டுமே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 6 தொகுதிக்கும் சோ்த்து இதுவரை 11 வேட்புமனுக்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.