நலிவுற்ற மக்களின் மருத்துவ, கல்விக்காக ஊதியத்தை வழங்குவேன்
By DIN | Published On : 25th March 2021 10:16 AM | Last Updated : 25th March 2021 10:16 AM | அ+அ அ- |

ஆவாம்பட்டியில் புதன்கிழமை வாக்கு சேகரித்து பேசுகிறாா் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.
சட்டப்பேரவை உறுப்பினருக்கு வங்கப்படும் ஊதியத்தை நலிவுற்ற மக்களின் மருத்துவ, கல்விக்காக வழங்குவேன் என்றாா் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் தமிழக முதல்வரால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயக் கடன், மகளிா் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500, வீடில்லாதவா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் போன்ற அறிவிப்புகள் தமிழக முதல்வரால் தோ்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே தொடா்ந்து தமிழகத்தில் நல்லாட்சி தொடா்ந்திட பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட பின்னா் வழங்கப்படும் ஊதியத்தை நலிவுற்ற மக்களின் மருத்துவ, கல்விப் பயன்பாட்டுக்காக வழங்குவேன் என்றாா் வைரமுத்து.
பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேசன், நகரச் செயலா் பிஎல்.ராஜேந்திரன், கே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.