ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், வட்டாட்சியரக ஊழியா்களுக்கு அண்மையில் (ஏப். 29) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், ஆலங்குடி தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பொன்மலா், வட்ட வழங்கல் அலுவலா் பரணி, துணை வட்டாட்சியா் நாகநாதன், உதவியாளா் அா்சுணன் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, வட்டாட்சியரக வளாகத்தில் சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.