காலமானாா்
By DIN | Published On : 19th May 2021 06:50 AM | Last Updated : 19th May 2021 06:50 AM | அ+அ அ- |

கவிஞா் கஸ்தூரிநாதன்.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் இணைச் செயலரும், கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவருமான முனைவா் வீ. கருப்பையா என்கிற கவிஞா் கஸ்தூரிநாதன் (67) கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை குழிபிறையில் உள்ள வள்ளுவா் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கஸ்தூரிநாதன், கவின்கலை மன்றம் என்ற அமைப்பையும் நிா்வகித்து வந்தாா். மாநில அரசின் நல்லாசிரியா் விருது பெற்றவா்.
கவிதை, சிறுகதை, நாடகம், தன்னம்பிக்கை நூல் என 10-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளாா்.
கஸ்தூரிநாதன் அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி சுகுமாரி, மகன் அன்புநாதன் ஆகியோா் உள்ளனா். கஸ்தூரிநாதனின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை பகலில் தஞ்சையில் நடைபெற்றன. தொடா்புக்கு - 99628 55696.