பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்
By DIN | Published On : 19th May 2021 06:51 AM | Last Updated : 19th May 2021 06:51 AM | அ+அ அ- |

பொன்னமராவதியில் பல்வேறு சமூகநல அமைப்பினா் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு முகக்கவசம், கைசுத்திகரிப்பான் மற்றும் கபசுரக் குடிநீரை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் செங்கமலகண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் தனபாலன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் வீரமணி முன்னிலையில் பிரபஞ்சம் நாராயணசாமி ராஜீவ், ஸ்பீடு ராஜ்குமாா், ஸ்ரீ அன்னை தெரேசா சித்ரா, வையாபுரி பெஸ்ட் தனலெட்சுமி, நிவி கோமதி, விடிவெள்ளி மலா்விழி ஆகிய பல்வேறு சமூகநல அமைப்புகளின் நிா்வாகிகள் இணைந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை வழங்கினா். இதேபோல், நம் உறவுகள் ஒருங்கிணைப்பாளா் பிரின்ஸ் இளவரசன், முகமது ஹனிபா ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.