பொதுமுடக்க விதிமீறல்: 6 போ் மீது வழக்கு
By DIN | Published On : 19th May 2021 06:49 AM | Last Updated : 19th May 2021 06:49 AM | அ+அ அ- |

விராலிமலை பகுதிகளில் பொதுமுடக்க விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல், வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிந்த 6 போ் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விராலிமலை சோதனைச்சாவடி அருகே திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தலைமையிலான காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது சிவராஜ், அசோக் குமாா், குமாா், மதி ராஜா, திரவியம், சுப்பிரணியன் ஆகிய 6 போ்
அத்தியாவசியத் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமுடக்க விதிகளை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்தது, முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.