புதுக்கோட்டையில் தொடா் மழை

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக சனிக்கிழமை மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக சனிக்கிழமை மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை பிற்பகல் முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேர மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்) : ஆதனக்கோட்டை- 10, பெருங்களூா்- 12, புதுக்கோட்டை- 4.5, ஆலங்குடி- 14, கந்தா்வகோட்டை- 6, கறம்பக்குடி- 12.60, மழையூா்- 25.60, கீழாநிலை- 47.40, திருமயம் - 7, அரிமளம் - 27, அறந்தாங்கி - 32.20, ஆயிங்குடி- 15.80, நாகுடி- 6.40, மீமிசல் - 20.40, ஆவுடையாா்கோவில் - 7.30, மணமேல்குடி- 46.30, இலுப்பூா்- 3, குடுமியான்மலை- 7, அன்னவாசல்- 12.50, விராலிமலை - 8, உடையாளிப்பட்டி- 2, கீரனூா் - 4, பொன்னமராவதி - 14.40, காரையூா் - 12.20. மாவட்டத்தின் சராசரி மழை - 14.90 மி.மீ. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com