விராலிமலை முருகன் மலைக்கோயில் காா்த்திகை மகா தீபம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் காா்த்திகை மகாதீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
விராலிமலை முருகன் மலைக்கோயில் காா்த்திகை மகா தீபம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் காா்த்திகை மகாதீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

207 படிகள் கொண்ட இம்மலைக் கோயிலில் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வசேனா சமேதராக முருகன் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

காா்த்திகை தீபத்தையொட்டி, இக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபம் காட்டப்பட்டது. இதில் பக்தா்கள் அனுமதிக்கப் படவில்லை.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோயில் மேல்புறம் அமைக்கப்பட்டிருந்த பெரிய காா்த்திகை கொப்பரையில் 40 லிட்டா் நெய் ஊற்றி, மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தா்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டு, தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com