முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் ரூ. 40 லட்சம் நிதியுதவி
By DIN | Published On : 30th November 2021 01:42 AM | Last Updated : 30th November 2021 01:42 AM | அ+அ அ- |

புதுகையில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் தொழில் நிதியுதவியை வழங்கிய ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டை: முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மடக்கு சக்கர நாற்காலிகளும், புதுக்கோட்டை மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் பல்வகை சிறு தொழில் செய்ய 10 பயனாளிகளுக்கு ரூ.1.17 லட்சம் மதிப்பில் நிதியுதவித் தொகைக்கான காசோலைகளும், மாவட்ட கிறித்தவ மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் பல்வகை சிறு தொழில் செய்ய 10 பயனாளிகளுக்கு ரூ.1,32,500 மதிப்பில் நிதியுதவித் தொகைக்கான காசோலைகளும், 10 பயனாளிகளுக்கு ரூ.48,709 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப்பெட்டிகளும் என நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.
இதேபோல மாவட்ட கிறித்துவ மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 87 பயனாளிகளுக்கு ரூ.12,91,500 மதிப்பிலும், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 256 பயனாளிகளுக்கு ரூ.29.73 லட்சம் மதிப்பிலும் சிறு தொழில் நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 541 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்தமிழ்செல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கச் செயலா் சலீம், கிறித்தவ மகளிா் உதவும் சங்கச் செயலா் ஆரோக்கியம் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G