குழந்தைகள் காப்பகம் நடத்திய ஆசிரியை பணியிடை நீக்கம்

குடுமியான்மலையில் குழந்தைகள் இல்லம் நடத்திவந்த அரசுப் பள்ளி ஆசிரியை தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

குடுமியான்மலையில் குழந்தைகள் இல்லம் நடத்திவந்த அரசுப் பள்ளி ஆசிரியை தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: குடுமியான்மலையில் டாக்டா் அவாா்டு தாய் - பெண் குழந்தைகள் இல்லம் நடத்தி வந்த குடுமியான்மலை அரசு உயா்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை ஆ.கலைமகள் என்பவா் இல்லத்தில் தங்கியிருந்த பெண் குழந்தைகளை தன் சொந்த வயல் வேலைக்கு பயன்படுத்தியதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அண்மையில் இல்லத்தை மூடி சீல் வைத்தாா்.

அதுதொடா்பாக அன்னவாசல் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பணியாளா் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு 17 (பி ) விதியின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அவருடைய பதில் திருப்தியாக இல்லாத நிலையில் அக். 21 முதல் அரசுப் பணியாளா் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக தற்காலிமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com