

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தினா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் இந்த சைக்கிள் பேரணியை அக்கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன் தொடங்கி வைத்துப் பேசினாா். நகரச் செயலா் சிற்பி மா. உலகநாதன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனா். நகரின் முக்கிய வீதிகளில் வந்த இந்த சைக்கிள் பேரணி, மீண்டும் திலகா் திடலில் நிறைவடைந்தது.
அறந்தாங்கியில்... அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே சைக்கிள் பேரணி தொடங்கியது. மாவட்டத் துணைச் செயலா் ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். நகரச் செயலா் பெரியசாமி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் தண்டாயுதபாணி, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.