கிணற்றுக்குள் இறங்கியவா் தவறிவிழுந்து பலி
By DIN | Published On : 01st September 2021 07:48 AM | Last Updated : 01st September 2021 07:48 AM | அ+அ அ- |

விராலிமலை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கபடி வீரா் கால் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக பிச்சை மணி(23) மற்றும் அவரது 8 வயது தம்பி ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை காலை குளிக்கச் சென்றனா். கிணற்றுக்குள் உள்ள படிகளில் இறங்கும்போது பிச்சைமணியின் கால் தவறி வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயமடைந்து கிணற்றில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, அவரது சகோதரா் அருகில் இருந்தவா்களை உதவிக்கு அழைத்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் சம்பவ இடம் வந்து கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். உடற்கூராய்வுக்குப் பிறகு, சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.