விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 01st September 2021 07:46 AM | Last Updated : 01st September 2021 07:46 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்த விஜயபாரதி(19). இவா், சனிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடிக்குச் சென்றுள்ளாா். வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே அவ்வழியாகச் சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த விஜயபாரதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.