கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 04th September 2021 01:35 AM | Last Updated : 04th September 2021 01:35 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகிலுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரியின் முதல்வா் செல்வராஜ் தலைமைவகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சதாசிவம் கரோனா தடுப்பு வழிமுறைகளை விளக்கிப் பேசினாா்.
கல்லூரி மாணவ, மாணவிகள் முகாமில் பங்கேற்று, தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா். ஊராட்சித் தலைவா் மீனாள் அயோத்திராஜா, பேராசிரியா்கள் வேஅ. பழனியப்பன், அழகம்மை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.