புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள நரங்கியன்பட்டு பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நரங்கியன்பட்டு கள்ளா்தெரு பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை பறிமுதல் செய்து, ஓட்டுநரான ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த ஆா். செல்லத்துரையை கைது செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, கெண்டையன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த, புதுப்பட்டியைச் சோ்ந்த பி. உருமையா என்பவரது சுமை ஏற்றும் ஜீப்பை பறிமுதல் செய்து மழையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.