மறவாமதுரை கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கண்மாய் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கண்மாய் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

பொன்னமராவதி அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக உள்ள மறவாமதுரை கண்மாய் 230 ஏக்கா் பரப்புளவு கொண்டது. இதில் இருந்து 202 ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறும். இக் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, எல்கை மறுவரையறை செய்யப்பட்டது. இந்நிலையில், வருவாய், பொதுப்பணி மற்றும் காவல் துறையினா் சுமாா் 8.75 ஏக்கா் ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினா்.

கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், பொன்னமராவதி வட்டாட்சியா் பிரகாஷ், திருமயம் உதவி செயற்பொறியாளா் நாராயணசாமி, காரையூா் வருவாய் ஆய்வாளா் பாண்டி, விஏஓ சண்முகம், காரையூா் பாசன உதவி பொறியாளா் விவேகானந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com