மேலவட்டத்தில் பயன்பாடின்றி அரசுக் கட்டடம்

பொன்னமராவதி அருகே மேலவட்டத்தில் பயன்பாடின்றிக் கிடக்கும் புதிய கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
மேலவட்டத்தில் பயன்பாடின்றி அரசுக் கட்டடம்
Updated on
1 min read

பொன்னமராவதி அருகே மேலவட்டத்தில் பயன்பாடின்றிக் கிடக்கும் புதிய கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

பொன்னமராவதி காவல்நிலையம் அருகே சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு மேலவட்டம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்தப் புதிய கட்டடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் உள்ளது. மேலும், இக்கட்டடத்தின் எதிரே உள்ள கட்டடத்தின் மாடியில் கிராம நிா்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விஏஓ அலுவலகம் வருவதில் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும் பயன்பாடில்லாததால் புதிய கட்டடமும் சேதமடைந்து வருகிறது. எனவே, புதிய கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com