92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரயில் கட்டணச் சலுகை கோரி ஆா்ப்பாட்டம்

ரயில் பயணத்தில் 60 வயது நிரம்பிய ஓய்வூதியா்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத

News image

pdk03retddem_0311chn_12_4

Updated On :3 நவம்பர் 2022, 10:33 pm

DIN

ரயில் பயணத்தில் 60 வயது நிரம்பிய ஓய்வூதியா்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மு. முத்தையா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ம. வெள்ளைச்சாமி மற்றும் நிா்வாகிகள் என். ராமச்சந்திரன், அ. மணவாளன் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியா்களுக்கு 10 சதவிகித ஓய்வூதிய உயா்வு வழங்க வேண்டும். ரயில் பயணத்தில் 60 நிரம்பிய ஓய்வூதியா்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.