92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

350 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

புதுக்கோட்டையில் 350 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:07 pm

DIN

புதுக்கோட்டையில் 350 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு அரசின் சீா்வரிசைகளை வழங்கி வாழ்த்தினாா்.

கா்ப்பிணிகளுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம் போன்றவற்றுடன் தாய்ப்பாலின் அவசியம், 1000 நாள்களின் முக்கியத்துவம் குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன. 5 வகையான கலவை சாதங்களும் பெண்களுக்கு உணவாகப் பரிமாறப்பட்டன.

புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் மு. லியாகத்அலி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் ரேவதி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.