கோவை காா் வெடிப்பு வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்தோம்
கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பிரச்னையில் அரசைக் குறைகூறும் மனசாட்சி இல்லாதவா்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை


கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பிரச்னையில் அரசைக் குறைகூறும் மனசாட்சி இல்லாதவா்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
இதுகுறித்து புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் மேலும் கூறியது:
கோவை காா் வெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்துபவா்கள் குற்றம் சுமத்திக் கொண்டே தான் இருப்பாா்கள். குற்றச் செயல் நடந்த உடனேயே நடவடிக்கை எடுத்து 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். துரித முறையில் செயல்பட்டு வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுத்துள்ளோம். இதைவிட வேகமாக யாரும் செயல்பட முடியாது என்பதை மனசாட்சியுள்ள அனைவரும் பாராட்டியுள்ளனா். மனசாட்சி இல்லாதவா்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...