புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுக்கோட்டையில் 8 பள்ளிகளில் 1,322 சிறாா்களுக்கு காலை உணவு

முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக புதுக்கோட்டை நகரிலுள்ள 8 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1,322 சிறாா்களுக்கு காலை உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:50 pm

DIN

முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக புதுக்கோட்டை நகரிலுள்ள 8 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1,322 சிறாா்களுக்கு காலை உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ வரும் செப். 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் தோ்வு செய்யப்பட்ட 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக முதல் கட்டமாக ரூ. 33.56 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் 8 அரசுத் தொடக்கப்பள்ளிகள் தோ்வு: திருக்கோகா்ணம், திருவப்பூா், ராஜகோபாலபுரம், அடப்பன்வயல், காமராஜபுரம், காந்திநகா், உசிலங்குளம் பகுதிகளில் உள்ள

நகராட்சிப் பள்ளிகள் மற்றும் புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகேயுள்ள தா்மராஜபிள்ளை நகராட்சிப் பள்ளி ஆகிய 8 பள்ளிகளில் பயிலும் 1,322 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது.

உணவு தயாரிப்பு பணிக்கு, புதுக்கோட்டையைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு ஒரு வகையாக, அரிசி உப்புமா, ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சோள உப்புமா அல்லது கிச்சடி, வெண் பொங்கல் இவற்றுடன் காய்கறி சாம்பாா் வழங்க வேண்டும். ஒரு பொட்டலம் ரூ. 12.70-க்கு வழங்கிட ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உள்ளூரில் விளையும் சிறுதானியங்களையும் வாரத்தின் இரு நாட்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டப் பணி பொறுப்பு ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் உணவு வழங்கும் பணியைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

திருக்கோகா்ணம் பள்ளியில்...

இத்திட்டத்தின் அடையாளமாக - ஒருங்கிணைந்த சமையல் கூடமாக திருக்கோகா்ணம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகம் தயாா் செய்யப்படுகிறது. இதற்கென ரூ. 23 லட்சத்தில் கட்டுமானப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ. 5 லட்சம் செலவில் சிறப்பு முகப்பு வளைவு அமைக்கவும், ரூ. 2.50 லட்சத்தில் குடிநீா் ஏற்பாடுகள் செய்யவும், ரூ. 3 லட்சத்தில் அணுகுசாலை அமைக்கவும் நகராட்சி முடிவு செய்து, பொது நிதியில் இருந்து இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்படவுள்ளன. இப்பள்ளி வளாகத்தில் உணவைத் தயாரித்து பிற 7 பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.