புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுக்கோட்டைகாவல் ஆய்வாளா் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

 புதுக்கோட்டையில் காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச்சென்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:01 pm

DIN

 புதுக்கோட்டையில் காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச்சென்றனா்.

புதுக்கோட்டை அழகா் நகரில் வசித்து வரும் கோபிநாத், ஆயுதப் படையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த நாள்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு, குடும்பத்தினருடன் சென்றாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதியினா் கணேஷ் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் சம்பவ இடத்துக்குவந்து பாா்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையறிந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் ராகவி அங்குவந்து விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், தகவலறிந்த கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டுக்குவந்து பாா்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. அவரது புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.