புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாக்குச்சாவடி மாற்றம் கருத்து தெரிவிக்க அழைப்பு

 புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மாற்றுவது குறித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:00 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மாற்றுவது குறித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடிகள் பட்டியலைத் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 1500 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிப் பட்டியல் சீரமைக்கப்படவுள்ளது.

எனவே, வாக்குச்சாவடிகளைப் பிரித்தல் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினா் அந்தந்தப் பகுதி வாக்காளா் பதிவு அலுவலரிடம் கருத்துகளை வரும் செப். 14ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.