புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைக்கும் முகாம் ஆய்வு

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைக்கும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:00 pm

DIN

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைக்கும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 39.75 சதவிகிதம் வாக்காளா்கள் தாங்களாகவே முன்வந்து வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொண்டுள்ளனா். மேலும் வாக்காளா்கள் சுயவிருப்பத்தின்பேரில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்ற முகாமை கந்தா்வகோட்டை வட்டாட்சியா் க.ராஜேஸ்வரி பாா்வையிட்டாா். தோ்தல் பிரிவு அலுவலா் செந்தில், பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி ஆகியோா் உடன் பாா்வையிட்டனா்.

விராலிமலையில் 92, இலுப்பூரில் 128, குளத்தூா் வட்டத்தில் 35 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 255 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில், விராலிமலையில் 5,118, இலுப்பூரில் 8,279, குளத்தூரில் 1,268 வாக்காளா்கள் என 14 ஆயிரத்து 665 வாக்காளா்கள் ஆதாா் எண்ணை இணைத்துக் கொண்டனா்.

கரோனா தடுப்பூசி முகாம்:

இதேபோல, பிரகதம்பாள் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமையும் ஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா், வீரடிப்பட்டி, வெள்ளாளவிடுதி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட 30 மையங்களில் கரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், தலைமை மருத்துவா் மணிமாறன், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.