புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

 சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவதற்கான தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:01 pm

DIN

 சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவதற்கான தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது ரூ. 5 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் பணியாற்றியோா் இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.

சுய விவரக் குறிப்பு, முழுமையான முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் சமூக நீதிக்காக பாடுபட்டதற்கான விவரங்களுடன் உரிய ஆவணங்களையும் இணைத்து வரும் செப். 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், புதுக்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.